தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டெல்டா பாசன பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததே அதிமுகதான்!' - சிறப்பு வேளாண் மண்டலம்

ஈரோடு: டெல்டா பாசன விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பை நிறைவேற்றியதே அதிமுக அரசுதான் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

AIADMK has declared the delta irrigation area as a special agricultural zone, said Minister Senkottayan
AIADMK has declared the delta irrigation area as a special agricultural zone, said Minister Senkottayan

By

Published : Feb 12, 2021, 1:31 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றங்கரையோரம் ஏழு தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. தாளவாடி உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் சிறப்பு இருவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா பாசன விவசாயிகளுக்கு குறைவாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம், சீற்றம் போன்ற பாதிப்பு அதிகளவில் ஏற்பட்ட டெல்டா பாசன விவசாயிகளுக்கு அதிகளவில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒரே ஒரு கோரிக்கை வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதே. அதனை இந்த அரசு திறம்பட அறிவித்து அவர்களது தேவையை நிறைவேற்றியுள்ளது.

பாசன பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்ததே அதிமுக

கரோனா தடுப்பூசி தற்போது முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறையினருக்கும் வழங்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details