ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள டி.என்.பாளையத்தில் இரண்டுமுறை தடைபட்டு, மூன்றாவது முறையாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஆறு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாகத் தேர்தல் அலுவலர் அறிவித்தார். அதனால் திமுகவினர் கோபி-சத்தி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை 'அமைச்சர் செங்கோட்டையனின் அத்துமீறல்' என்ற தலைப்பில் கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுவரொட்டிகள் திமுக ஒன்றியச்செயலாளர் சிவபாலன் தலைமையில் ஒட்டப்பட்டது. தகவலறிந்த அதிமுக கட்சி நிர்வாகியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கந்தசாமி, தொண்டர்களுடன் சென்று சுவரொட்டிகளைக் கிழித்தெறிந்தனர்.