ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், கட்சியின் மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார். அப்போது, தேர்தலில் பணியாற்றும் முறை, சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கியமானதாக இருப்பதால் கவனத்துடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
'அதிமுக - பாஜக கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தாது' : சஞ்சய் தத் - காங்கிரஸ் கட்சி
ஈரோடு: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.
!['அதிமுக - பாஜக கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்தாது' : சஞ்சய் தத் சஞ்சய்தத்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:51:44:1603934504-screenshot-2020-10-28-21-09-36-79-4aed3257f278fcf7bfa3abd644e233331603899840973-59-2810email-1603899852-50.jpg)
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் தத், “தனிப்பட்டவர்கள் குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்வதை தவிர்த்து வருகிறது. ஆனால், பாஜக சாதாரண விடயங்களை பெரிதுபடுத்தி மக்களின் கவனத்தை திட்டமிட்டு திசைதிருப்பி வருகிறது.
மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கரோனா கால பாதிப்பு, ஜிஎஸ்டி கட்ட முடியாமல் சிறு வணிகர்கள் நிறுவனங்களை மூடிவருவது குறித்து கவலைப்படாமல் இருப்பதை மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி பொதுமக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று தெரிவித்தார்.