ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நெல், கடலை, கரும்பு பயிருக்கு ட்ரோன் மூலம் உரம் தெளிக்க ஏற்பாடு ஈரோடு:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இப்கோ(IFFCO) நிறுவன ஒத்துழைப்புடன் ட்ரோன் மற்றும் நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நானோ, நானோ டிஏபி உரங்களின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ட்ரோன் பயன்பாட்டை அனைத்து விவசாயிகள் தெரிந்து கொள்வதற்கு வேளாண் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் நடைபெற்றது.
இதில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பதால் விவசாயிகளுக்கு காலவிரயம் தவிர்ப்பு, ஆட்கள் பற்றாக் குறையை சமாளித்தல் மற்றும் சரியான வகித மருந்து கலப்பு போன்ற தகவலள்கள் காணொலி மூலம் விளக்கமளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ட்ரோன் இயந்திரம் மூலம் மருந்து தெளிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
விவசாயிகள் முன்னிலையில் தண்ணீருடன் திரவ உரம் கலக்கப்பட்டு ட்ரோனில் ஊற்றி அதனை பறக்கவிட்டு பயிர்களுக்கு தெளிக்கப்பட்டது. இந்த ட்ரோன் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதின் மூலம் மண்வளம் பாதுகாப்பதுடன் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும். 1 ஏக்கர் தெளிக்க 10 நிமிடங்கள் போதுமானது.
வேளாண் பல்கலைக்கழகம் 1 மணி நேரத்து ரூ.600 கட்டணம் மட்டுமே வசூலிக்கிறது. ட்ரோன் மூலம் உரம் தெளிக்க அதனை பயன்படுத்த விரும்புவோருக்காக புதிய செயலி அறிமுகப்பட்டுள்ளது. இந்த செயலியில் பதிவு செய்தால் தேவைப்படும் நாளில் ட்ரோன் கிடைக்கும் என்றும் வேளாண் பல்கலைக்கழகமும் வேளாண் பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது என வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை திட்டமிட்டப்படி வெளியிடப் பணிகள் தீவிரம்!