ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவிகள் 11 பேர் மூன்று மாதங்கள் அப்பகுதியில் தங்கி விவசாயம் குறித்த செயல்விளக்கம், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி கிராமத்தில் செல்வக்குமார் என்ற விவசாயி வயலில் கூலியாட்களுடன் இணைந்து மாணவிகளும் நெல் நடவுப்பணியை மேற்கொண்டனர். அப்போது நெல் வயலை உழவு செய்து தயார் படுத்துவது, சேராக்கி மாடு பூட்டி சமப்படுத்துவது, நெல் நாற்றுகளைப் பிடிங்கி கத்தையாக்கி நெல் நடவை மேற்கொள்வது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.