இது குறித்து பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சு.பாக்கியலட்சுமி கூறியதாவது, “கோடை உழவு செய்வதால் மண்ணுக்குள் இருக்கும் கூட்டுப் புழுக்கள் மேற் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பறவைகளால் அழிக்கப்படுகிறது. மேலும், கோடை உழவு செய்யப்படுவதால் மழை நீர் மண்ணுக்குள் சென்று சேகரிக்கப்பட்டு, நிலத்தின் வறட்சி விறட்டப்பட்டு ஈரம் காக்கப்படுகிறது. இந்த சமயத்தில் விவசாயிகள் குறுகிய நாள் சாகுபடி பயிரான சிறுதானிய கம்பு, சோளம், ராகி மற்றும் பயறு வகைகளான உளுந்து, தட்டைபயறு, பாசிபயறு மற்றும் எண்ணெய் வித்துப்பயிர்களான நிலக்கடலை, எள் போன்ற பயிர்களை சாகுபடி செய்யலாம்.
பவானிசாகர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் தற்போது உளுந்து விதைகள் வம்பன்-5,6, பாசிப்பயிரில்-கோ-8, நிலக்கடலையில்-கே-6, போன்ற சான்று பெற்ற ரகங்கள் இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் விதைகளை பெற்று பயனடையலாம்.