தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியில் நாட்டு இன மோப்பநாய்கள் சாகசம்! - Forest Crime Prevention

ஈரோடு: வனத்தில் பதுங்கியிருக்கும் சமூக விரோதிகள், புதைந்திருக்கும் சந்தனக்கட்டைகளை கண்டுபிடிக்கும் நாட்டு இன மோப்பநாய்களின், அபாரச் செயல் திறனைகண்டு வனத்துறையினர் அசந்து போயினர்.

நாட்டின மோப்பநாய்  Adventure of country sniffer dogs  சத்தியில் நாட்டின மோப்பநாய்கள் சாகசம்  வனக்குற்றத்தடுப்பு  Forest Crime Prevention  Fire prevention rehearsal show
Adventure of country sniffer dogs

By

Published : Jan 1, 2021, 9:56 AM IST

தமிழ்நாட்டில், வனக்குற்றங்களை தடுக்கவும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் தமிழ்நாடு வனத்துறை 4 நாட்டு இன மோப்பநாய்களுக்கு ஒன்பது மாதங்களாக பயிற்சி அளித்துவருகிறது. இதற்கு சான்டி, ரானா, ஹக்சா, பிரின்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பயிற்சி

கடந்த 2 மாதத்தில் வனத்தில் பதுக்கி வைத்திருக்கும் சந்தனக் கட்டைகள், போதைப்பொருள்கள், வேட்டையாடும் கும்பலைப் பிடிக்க பயிற்சி அளித்ததில், நல்ல பயன் கிடைத்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகேயுள்ள பண்ணாரியில் வனக்குற்றத்தடுப்பு, தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சாகசம்

இந்நிகழ்வில், மோப்பநாய்களின் சாகசங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. அப்போது, சந்தனக் கட்டையை பதுக்கியிருக்கும் இடத்தை சரியாக கண்டுபிடித்து அதனை எடுத்து வந்தது. அதேபோல் மண்ணில் புதைத்து வைத்திருந்த சந்தனக் கட்டையை கண்டுபிடித்து அதனை தோண்டி எடுத்து சாதனை படைத்தன. அட்டாக் எனக் கட்டளை பிறப்பித்தவுடன் அங்கு வந்த பூனையை துரத்தி பிடிக்க ஓடியது.

இந்தியாவிலேயே நாட்டு இன நாய்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது இது முதல்முறை. 9 மாத பயிற்சிக்கு பின் வனக்குற்றங்களை கண்டுபிடிக்க பேரூதவியாக இருக்கும் எனப் பயிற்சியாளரும் மாவட்ட உதவி வனக்காப்பாளருமான மகேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:எஸ்பியிடம் பாராட்டு வாங்கிய மோப்ப நாய் ராக்கி!

ABOUT THE AUTHOR

...view details