ஈரோடு :கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளகோயில் பாளையத்தில் கடந்த 14ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம் தனது ஆதரவாளர்களுடன் தடுப்பூசி போட காத்திருந்தவர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில் வழங்கிக் கொண்டு இருந்தனர்.
அப்போது கோசனம் பொத்தபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவர் கரோனா காலத்தில் 144 தடை உத்தரவு உள்ள நேரத்தில் இதுபோன்று கூட்டமாக முகக்கவசம் அணியாமல் இருப்பது ஏன் என ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியம், இளங்கோவைத் தகாத வார்த்தையில் பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.