ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 24 ஆம் தேதி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர்ராமலிங்கம், தென்னரசு கலந்துகொண்டனர். விழாவின்போது, 2018ஆம் ஆண்டு லேப்டாப் கிடைக்காத மாணவர்கள் தங்களுக்கு உடனடியாக லேப்டாப் வழங்க வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர். அப்போது, இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற இரண்டு செய்தியாளர்களை அங்கிருந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கத்தின் மகனும் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளருமான ரத்தன் பிரத்வியும் கட்சியினர் சிலரும் செய்தி சேகரிக்கவிடாமல் தாக்கியுள்ளனர்.
செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர் கைது
ஈரோடு: அரசு லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்தனர்.
செய்தியாளர்களை தாக்கிய அதிமுகவினர் கைது
இச்சம்பவம், குறித்து செய்தியாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து ஈரோடு வடக்கு காவல் துறையினர் நேற்று நள்ளிரவு ரத்தன் ப்ரித்வி, அதிமுகவைச் சேர்ந்த சிவக்குமார், ஜெயபாலாஜி, விஜய், சரவணன் ஆகியோரை இரண்டு பிரிவுகளின் கீழ் கைது செய்து காவல்நிலைய ஜாமீனில் விடுதலை செய்தனர்.