தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக - தேமுதிக மிகவும் ராசியான கூட்டணி' - பிரேமலதா விஜயகாந்த் ஆருடம்! - ஈரோடு நாடாளுமன்றம் பிரச்சாரம்

ஈரோடு: அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே அமைந்துள்ள கூட்டணி மிகவும் ராசியானது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆருடம் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

By

Published : Mar 30, 2019, 10:55 AM IST

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனுக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு ஆர்.என்.புதூர் பகுதியில் பேசிய பிரேமலதா, அதிமுக - தேமுதிக கூட்டணி மக்கள் ஆதரவு பெற்ற கூட்டணி, இக்கூட்டணியானது மிகவும் ராசியான கூட்டணி. இவ்விரு கட்சிகளும் இணைந்து கடந்த காலத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதேபோல், இந்த முறையும் வெற்றி பெறும் என்றார்.

வலிமைமிக்க பாரத பிரதமர் மோடியால் தான் விவசாயிகளின் கோரிக்கைகளான நதிகள் இணைப்பு, விலைவாசி கட்டுப்பாடு, நாட்டின் பாதுகாப்பு போன்றவை செய்யப்படும் என்றார். திமுக கூட்டணியில் இடம் பெற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும், தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரசார பாணியில் அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்வீர்களா? செய்வீர்களா? என மக்களிடம் முழக்கத்தை முன்வைத்து வாக்கு சேகரித்துள்ளார்.

ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details