தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் தோற்ற விரக்தி - அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை - admk candidate

தேர்தலில் தோற்ற விரக்தியில் அதிமுக வேட்பாளரின் கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த துரைசாமி
உயிரிழந்த துரைசாமி

By

Published : Feb 23, 2022, 10:52 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகேவுள்ள அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் திமுகவும், அதிமுக 2 வார்டுகளிலும், 4 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

இதில் 12ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெரியூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மனைவி சகுந்தலா திமுக வேட்பாளர் மகேஸ்வரியிடம் தோல்வியுற்றார். திமுக வேட்பாளர் 468 வாக்குகள் பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் சகுந்தலா 113 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

உயிரிழந்த துரைசாமி

இதனால், மனமுடைந்த சகுந்தலாவின் கணவரும் அதிமுக பிரமுகருமான துரைசாமி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பண்ணாரி, அதிமுக ஒன்றிய செயலாளர் வி.ஏ.பழனிச்சாமி ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தற்கொலை தீர்வல்ல

இதையும் படிங்க:தேர்தல் தோல்வியால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் - கத்திக்குத்தில் திமுக பிரமுகர் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details