ஈரோடு: கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கதளி, நேந்திரன், பூவன், ரஸ்தாளி, தேன்வாழை மற்றும் செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது.
இதில் அறுவடை செய்யப்பட்ட 4,800 க்கும் மேற்பட்ட வாழைதார்கள், கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற வாழைதார் ஏல விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஏலத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், பழனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஆடிப்பெருக்கு என்பதால், வழிபாட்டு தலங்களில் வாழைப்பழம் தேவையின் அவசியத்தை கருத்தில் கொண்டு, ஏல விற்பனையில் வாழைத்தார்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தனர். இதில் பூவன், தேன்வாழை, செவ்வாழை தார்கள் ஒன்று அதிகபட்சமாக ரூ.710 முதல் ரூ.750 வரையில் விற்பனையானது.
ஆடிப்பெருக்கு: பூவன் தார் ஒன்றுக்கு ரூ.750 வரை விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி அதேபோல் கதளி, நேந்திரன் கிலோ ஒன்று ரூ15 க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.40 முதல் ரூ.42 ரூபாய் வரை ஏலத்தில் விற்பனையானது. ஆடிப்பெருக்கையொட்டி நடைபெற்ற வாழைத்தார் ஏல விற்பனையில், எதிர்பார்த்த விலையை விட கூடுதல் விலைக்கு வாழைகள் விற்பனை செய்யப்பட்டதால். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க:உயர்ந்தது தங்கம் விலை...அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!