மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் 5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வீட்டை முற்றுகையிட்டு ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தினர்.
பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி செங்கோட்டையின் வீட்டை முற்றுகையிட்ட ஆதித்தமிழர் பேரவையினர்.
போராட்டத்தின் போது ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் ஆதியமான் கூறும்போது, ”இப்போது நடைபெறும் போராட்டம் வெறும் ஆரம்ப கட்டப்போராட்டம் மட்டுமே. 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாமல் தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்” என்றார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க : கொரோனா வைரஸ் - ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு திறப்பு