தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதிகருவண்ணராயர் மாசி பௌர்ணமி விழா - பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடு! - Bhavanisagar Wildlife Officer

ஈரோடு: பவானிசாகர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஆதிகருவண்ணராயர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

adhikaruvannarayar-masi-pournami-festival
adhikaruvannarayar-masi-pournami-festival

By

Published : Mar 8, 2020, 4:48 PM IST

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஜெலட்டி ஆதிகருவண்ணராயர், பொம்மாதேவி கோயில் பொங்கல் விழா ஆண்டுதோறும் மாசி பெளர்ணமி அன்று நடைபெற்று வருகிறது. உப்பிலியர் சமூக மக்களின் குலதெய்வமாக கருதப்படும் இக்கோயிலில் கிடா பலியிட்டு வழிபடுவது வழக்கம். இதற்காக தமிழ்நாட்டிலிருந்து கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தன கடத்தல் வீரப்பன் நடமாடிய பகுதி என்பதாலும் மாவோயிஸ்ட்கள் ஊடுருவலைத் தடுப்பதற்கும், கோடை காலம் என்பதால் நடுக்காட்டில் தீ மூட்டக்கூடாது, கேஸ் அடுப்பில் மட்டுமே சமைக்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது போன்ற கடும் கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது.

பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுபாடு

இது குறித்து பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ்குமார் கூறுகையில், 'பவானிசாகர் அடுத்த கருவண்ணராயர் கோயில் திருவிழா அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெறுவதால் வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று இரவு காட்டுப்பகுதியில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:

பவானி அணையில் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details