தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கைகள்' - அமைச்சர் சு.முத்துசாமி! - அமைச்சர் சு.முத்துசாமி

ஈரோடு: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சு.முத்துசாமி
அமைச்சர் சு.முத்துசாமி

By

Published : May 17, 2021, 7:35 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்கான பணிகள் நேற்று (மே16) தொடங்கியது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே 550 படுக்கைகள் உள்ளன. தற்போது கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளது. அடுத்த 10 நாள்களில் 300 படுக்கைகளும், அதனைத் தொடர்ந்து 200 படுக்கைகளும் பயன்பாட்டிற்கு வரவுள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கரோனா அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிப்பதோடு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முழு ஊரடங்கு உள்ளிட்ட அரசின் நவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெறும் அவலம்!

ABOUT THE AUTHOR

...view details