ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் திரைப்பட நடிகர் வடிவேலு நேற்று இந்த கோயிலுக்கு வந்தார்.
இதைத்தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற நடிகர் வடிவேலு பண்ணாரி அம்மனை வழிபட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் நடிகர் வடிவேலுவை கண்ட பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது நடிகர் வடிவேலு கோவிலில் வேலை செய்யும் தூய்மை பணியாளர் ஒருவரை ஆரத்தழுவி தோளில் கை போட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு திம்பம் மலைப்பாதை வழியாக பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு மைசூர் செல்வதாக தெரிவித்தார்.
பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் இதையும் படிங்க :
காமன்வெல்த் 2022 மேடையில் ஒலித்த யுவன் பாடல்