ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள காராச்சிக்கொரையில் ரூ.7 கோடி செலவில் பழங்குடியினர் வாழ்க்கையை விவரிக்கும் வகையிலான அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று (நவ. 26) அருங்காட்சியகத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார். அப்போது அமைச்சரிடம் இந்த திட்டங்கள் குறித்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருமான (பொறுப்பு) ராமசுப்பிரமணியன் விளக்கினார்.
தொடர்ந்து பல்வேறு பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை தத்துவமாக வடிவமைக்கப்பட்ட சிலைகளை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "முதன்முறையாக 7 வகை பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் அருங்காட்சியகம் பவானிசாகரில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இந்த இடம் பவானிசாகர் அணை கட்டுவதற்காக 20 ஏக்கர் பரப்பளவை ஏற்கனவே பொதுப்பணித்துறைக்கு வழங்கப்பட்டிருந்தது. தற்போது பொதுப்பணித்துறையினர் மீண்டும் வனத்துறையினருக்கு இந்த இடத்தை ஒப்படைத்துள்ளனர்.