ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள் உள்ளன. வனத்திலிருந்து வெளியேறும் அவைகள் அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு மாடுகளை வேட்டையாடுகின்றன.
இந்த சூழலில், தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வீரபத்ரா (39). இவர் நான்கு மாடுகள், இரண்டு எருமைகள் வளர்த்துவருகிறார். இவரது வீடும், தோட்டமும் ஊரை ஒட்டியுள்ளது. இந்நிலையில் அவரது மாடு, எருமைகளை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் கட்டி வைத்துவிட்டு நேற்றிரவு தூங்க சென்றார்.
இன்று காலை எழுந்த அவர் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது மாடு ஒன்று விலங்கு தாக்கி உயிரிழந்திருந்தது. இதுபற்றி அவர் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மாட்டையும், அங்கு பதிவாகி இருந்த விலங்கின் கால் தடங்களையும் ஆய்வு செய்தனர்.
ஊருக்குள் புகுந்த சிறுத்தை பின்னர் அது சிறுத்தையின் கால்தடம் என்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. தாளவாடி, ஜீர்கள்ளி, வனச்சரகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களாக சிறுத்தையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:வீட்டின் படுக்கை அறையில் ஹாயாக படுத்திருந்த சிறுத்தை!