ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வழக்கம் போல் இரவு பணி முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஓலப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது தூக்கக்கலக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தூக்கத்தில் பைக் ஓட்டிய இளைஞர் நிலைதடுமாறி விழுந்து விபத்து! - வாலிபர்
ஈரோடு: இரு சக்கர வாகனத்தில் தூங்கியபடி சென்ற வாலிபர் கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி
நெடுஞ்சாலையில் நேர்ந்த கோர விபத்து
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஐஆர்டிடி கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.