ஈரோடு:சத்தியமங்கலத்தில் இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சிக்கரசம்பாக்கத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தது.
அப்போது கடை வீதியில் வேகமாக சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் முன்னர் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது, ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி சாலையோர மளிகைக் கடையில் மோதி, அருகில் இருந்த சாக்கடையில் இறங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.