தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசனூரில் வெப்பம் தணித்த கோடை மழை - aasanoor receives heavy summer rain

ஈரோடு: ஆசனூர் பகுதியில் பெய்த கோடை மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது.

rain
rain

By

Published : May 5, 2021, 6:16 AM IST

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கோடை வெப்பம் காரணமாக வனக்குட்டைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. கடும் வெப்பம் காரணமாக வனவிலங்குகள் குடிநீர் தேடி மைசூர் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்வது வாடிக்கையாகிவருகிறது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஆசனூர், அரேப்பாளையம், ஒங்கல்வாடி பகுதியில் நேற்று (மே.04) மாலை இடியுடன் கூடிய கோடை மழை பெய்தது.

தொடர்ந்து பெய்த கோடை மழையால் சாலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்தக் கோடை மழை பீன்ஸ் சாகுபடிக்கு உதவும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தாளவாடி அடுத்த அருள்வாடி, மெட்டல்வாடி, மல்லன்குழி, தமிழ்புரம் பைனாபுரம் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொட்டகாஜனூர், மெட்டல்வாடி குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக பெரும்பாலான தடுப்பணைகள் நிரம்பும் வாய்ப்புள்ளது. வனத்தில் ஏற்படும் காட்டுத்தீ விபத்தும் இம்மழையால் குறையும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ண்மாயில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details