சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. ஆனால், பருவமழை சரிவர பெய்யாததால் தலமலையில் உள்ள குட்டைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. இதனால் தலமலையில் வசிக்கும் யானைகள் தண்ணீருக்காக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து தலமலையிலிருந்து ஆசனூருக்கு வரத்தொடங்கிவிட்டன.
ஆசனூர் அருகே ஜாலியாக சாலையை கடந்த யானைகள்! - sathiyamangalam
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள நான்கு யானைகள் தண்ணீருக்காக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன.
சாலையை கடந்து செல்லும் யானைகள்
குடிநீரைத் தேடி யானைகள் சாலையை கடந்து செல்வதால் 30கி.மீ க்கும் குறைவான வேகத்தில் வாகனத்தை இயக்கவேண்டும் என வனத்துறை சார்பில் ஆங்காங்கே விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இன்று நான்கு யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையை கடந்து சென்றன.
அப்போது சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் யானைகள் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்லும் வரை காத்திருந்து பின்னர் புறப்பட்டு சென்றனர்