ஈரோடு:கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள், திம்பம் வழியாக சத்தியமங்கலம் சர்க்கரை ஆலைக்குச் செல்வது வழக்கம். அவ்வப்போது அதிக அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கரும்பு லாரி ஓட்டுநர்கள் சில கரும்புகட்டுகளை வனப்பகுதியில் வீசியெறிந்து செல்வர். இதைனை காட்டு யானைகள் சாப்பிட்டு பழகிவிட்டன. அதனாலேயே அடிக்கடி சாலைக்கு வரும் யானைகள் வாகனங்களை வேவு பார்த்து வருகின்றன.
அந்த வகையில் திம்பம் மலைப்பாதையின் 2ஆவது வளைவில் ஒற்றை யானை நின்று கொண்டு கரும்பு லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருந்தது. நீண்ட நேரமாக அங்கிருந்து போகாமல் அவ்வழியாக பயணிக்கும் லாரி, வேன் ஆகியவற்றை மறித்து கரும்பை தேடியது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து பண்ணாரி வனச்சோதனைசாவடிக்கு வாகனவோட்டிகள் தகவல் தெரிவித்தனர்.