ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கரும்பு லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள கரும்பு ஆலைக்கு பயணிக்கின்றன. ஆசனூர் அடுத்த காரப்பள்ளம் சோதனைச்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் கரும்புக்காக யானைகள் முகாமிடுவது வழக்கமாகிவிட்டது.
தற்போது இரவு நேரத்தில் மேல் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதனால் சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் சாம்ராஜ்நகரில் இருந்து கோவை சென்ற கார் ஒன்று காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. காரில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம் அமர்ந்திருந்தனர்.