தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைப்பகுதியில் ஹாயாக உலாவந்த காட்டு யானை - ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதி

ஈரோடு மாவட்டம் ஆசனூர் மலைப்பகுதியில் பட்டப் பகலில் ஊருக்குள் புகுந்து நடமாடிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharatஆசனூர் மலைப்பகுதியில் ஹாயாக உலாவந்த காட்டு யானையால் பரபரப்பு
Etv Bharatஆசனூர் மலைப்பகுதியில் ஹாயாக உலாவந்த காட்டு யானையால் பரபரப்பு

By

Published : Nov 24, 2022, 3:14 PM IST

ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் ஆசனூர் மலைப்பகுதியில் அரேப்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வனப்பகுதி என்பதால் இரவு நேரங்களில் இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாடுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று (நவ-24)காலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை பகல் நேரத்தில் அரேப்பாளையம் கிராமத்தில் நுழைந்தது. காட்டு யானை குடியிருப்பு பகுதியில் நடமாடுவதை கண்ட மலை கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

ஊருக்குள் புகுந்த காட்டு யானை அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் சாலை வழியாக ஜாலியாக நடந்து சென்றது. காட்டு யானை ஊருக்குள் ஹாயாக நடந்து செல்வதை கண்ட மலை கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசனூர் மலைப்பகுதியில் ஹாயாக உலாவந்த காட்டு யானையால் பரபரப்பு

சிறிது நேரம் கிராமத்திற்குள் நடமாடிய காட்டு யானை பின்னர் வனப் பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த ஆசனூர் வனத்துறையினர் காட்டு யானை நடமாடிய பகுதிக்கு சென்று மீண்டும் வனப்பகுதியை விட்டு யானை வெளியேறுகிறதா என கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க;குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலை தீ விபத்து; 2 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details