தமிழ்நாடு

tamil nadu

தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு பலி

By

Published : May 31, 2022, 7:52 AM IST

தாளவாடி அருகே புலி தாக்கியதில் பசுமாடு உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தாளவாடி அருகே புலி  தாக்கி பசுமாடு பலி
தாளவாடி அருகே புலி தாக்கி பசுமாடு பலி

தமிழகம் கர்நாடக எல்லையான தாளவாடி வனப்பகுதியில் சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் சிறுத்தை, புலிகள் புகுந்து விடுகின்றன. தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் தாளவாடி சேசன் நகரை சேர்ந்த விவசாயி செல்வகுமார் தோட்டத்தில் 6 மாடுகள் பாரமரித்து வந்தார். திங்கள்கிழமை தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பிற்பகலில் மாடுகள் மிரட்சியுடன் கத்தும் சத்தம் கேட்டு தோட்டத்திற்கு சென்ற போது பட்டபகலில் பசு மாட்டை புலி கடித்து குதறுவது தெரியவந்தது.

செவ்வகுமார் சப்தம் போடவே பயந்து போன புலி மாட்டை விட்டு விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்தது. கட்டியிருந்த மாடுகளை தாக்கியதில் ஒரு பசுமாடு உயிரிழந்தது. மற்றொரு பசு காயத்துடன் தப்பியது. இது குறித்து கிராமமக்கள் தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த வனத்துறை கால் தடம் மற்றும் இறந்த மாடுகளை ஆய்வு செய்தனர். அதன் கால்தடத்தை ஆய்வு செய்ததில் புலி தாக்கி மாடுகள் உயிரிழந்தது தெரியவந்தது. கடந்த 2 மாதத்தில் 3 காவல் நாய்கள், 2 கன்றுகுட்டிகள் பலியானது. வனத்துறையினர் புலி நடமாட்டத்தை கேமரா வைத்து கண்காணித்து கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இறந்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : திருச்சி - தஞ்சை இடையே மீண்டும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் - பயணிகள் உற்சாகம்!

ABOUT THE AUTHOR

...view details