ஈரோடு: சத்தியமங்கலம் அக்ரஹாரம் காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகையின் போது சீனிவாசனின் மனைவி விக்னேஷ்வரி அவரது பெற்றோர் ஊரான சேலம் கன்னங்குறிச்சிக்கு செல்லலாம் என்று சீனிவாசனிடம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை இல்லை... மனமுடைந்த பள்ளி ஆசிரியர் தற்கொலை... - ஆசிரியர் தற்கொலை
ஈரோட்டில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தீபாவளிக்கு விடுமுறை கிடைக்காததால் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை இல்லை...! : மனமுடைந்த பள்ளி ஆசிரியர் தற்கொலை
ஆனால், விடுமுறை இல்லாததால் ஊருக்கு செல்ல முடியாது என்று சீனிவாசன் மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சீனிவாசன் மனமுடைந்து விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனிவாசன் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய கலையனூர் பகுதியில் ஆற்றில் சீனிவாசனின் உடல் மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரது உடலை மீட்டனர்.