தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் பாய்ந்த தனியார் நிறுவன வேன் - Accident near Sathyamangalam

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூரில் சென்றுகொண்டிருந்த தனியார் காகித ஆலை நிறுவன வேன், கட்டுப்பாட்டை இழந்து பாசன வாய்க்காலில் பாய்ந்தது.

வாய்க்காலில் பாய்ந்த தனியார் நிறுவன வேன்
வாய்க்காலில் பாய்ந்த தனியார் நிறுவன வேன்

By

Published : Mar 9, 2020, 4:18 PM IST

சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் தனியார் காகித ஆலை வேன் ஒன்று, சத்தியமங்கலத்தில் ஆலை பணியாளர்களை இறக்கிவிட்டு, பவானிசாகர் சாலையில் சென்று கொண்டிருந்தது. வேனை ராஜேசேகர் என்பவர் ஓட்டினார். வேனில் ஆலை பணியாளர்கள் ஜெயராஜ், சேகர் மற்றும் அபுபக்கர் ஆகியோர் இருந்தனர்.

திடீரென, எரங்காட்டூர் என்ற இடத்தில் வேன் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பாசன வாய்க்காலில் பாய்ந்தது. வாய்க்காலில் 1500 கனஅடி நீர் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டதால், இரு கரையை தொட்டபடி சென்ற நீரில் வேன் மூழ்கியது. அங்கிருந்து பூ வியாபாரிகள், வேனில் இருந்த ஓட்டுநர் உட்பட 4 பேரையும் பத்திரமாக மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

வாய்க்காலில் பாய்ந்த தனியார் நிறுவன வேன் மீட்கும் காட்சி

அதனைத்தொடர்ந்து கிரேன் மூலம் நீரில் மூழ்கிய வேனை மீட்டனர். இது குறித்து பவானிசாகர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சாராயக் கடத்தலில் ஈடுபட்ட நபர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

ABOUT THE AUTHOR

...view details