ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொங்கள்ளி காலனியைச் சேர்ந்தவர் சித்தராஜ் (55). இவர் ஆடு மாடுகளை பராமரித்து வந்தார். இவரது நண்பர் தேவன். இந்நிலையில் சித்தராஜ் நண்பர் தேவனின் இரு சக்கர வாகனத்தில் பனஹள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஆனந்தபுரம் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த கர்நாடக அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், தேவன் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.