தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

13 வயது சிறுமி கடத்தல்: கட்டடத் தொழிலாளி கைது - Pocso Act

ஈரோடு: திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி 13 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற கட்டடத் தொழிலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

போக்சோ சட்டத்தில் கட்டடத்தொழிலாளி கைது  13 வயது சிறுமி கடத்தல்  போக்சோ சட்டம்  சிறுமி கடத்தல்  A Man Arrested Under Pocso Act In Erode  A Man Arrested Under Pocso Act  Pocso Act  13-year-old girl abducted
A Man Arrested Under Pocso Act

By

Published : Apr 28, 2021, 10:33 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கோணமூலையைச் சேர்ந்தவர் செந்தில் (20). இவர் கட்டடத் தொழில் செய்துவருகிறார். செந்தில் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி சில நாள்களுக்கு முன்பு கடத்திச் சென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமியைக் காணவில்லை எனப் பெற்றோர் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதே பகுதியில் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திய கட்டத் தொழிலாளியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் செந்திலை முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details