ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாடு-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் வகையில், சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிய லாரி ஒன்று, கர்நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. திம்பத்தை அடுத்த சீவக்காய் பள்ளம் வளைவில் லாரி திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.