ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக்கோட்டத்தில் சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்த வகையில் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாடு, நாய், ஆடுகளை, சிறுத்தைகள் தாக்கி கொல்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில் ஆசனூர் அடுத்த பங்களாதொட்டி கிராமத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று அங்குள்ள ஆரோக்கியசாமி என்பவரது வீட்டுக்குள் புகுந்து கால்நடைகளைத் தேடியது. அப்போது வீட்டிலிருந்தவர்கள் சிறுத்தையை கண்டு கூச்சல் போட்டனர். இதனால் சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.