ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் 1988ஆம் ஆண்டு முதல் நீதிமன்றம் இயங்கி வருகிறது. மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், நீதித்துறை குற்றவியல் நீதிமன்றம் என 3 நீதிமன்றங்கள் உள்ளன. சத்தியமங்கலத்தில் நீதிமன்றத்திற்கென சொந்த கட்டிடம் இல்லாததால் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கடந்த 30 ஆண்டுகாலமாக வாடகைக்கு இயங்கி வருகிறது. இதுவரை ரூ. 2 கோடிக்கு மேல் அரசு சார்பில் வாடகையாக செலவிடப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் நீதிமன்றம் - people request
ஈரோடு: தனியார் திருமண மண்டபத்தில் இயங்கி வரும் சத்தியமங்கலம் நீதிமன்றத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கென கோபிசெட்டிப்பாளையம் சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள மூன்று ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்தை வாங்குவதில் சில சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில், நீதிமன்றத்திற்கான நிலத்தை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சத்தியமங்கலம் அரசுகலைக்கல்லூரி அருகே வருவாய்த்துறைக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் நீதித்துறைக்குஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புஉள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இதற்கென நிதி நீதித்துறையில் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே விரைவில், நீதிமன்ற வளாகம் கட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.