சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பரவல் உலக நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கில்லை. இந்தியாவில் இதுவரை எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆயிரத்து 75 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 60 பேர் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் இருவர் நிறைமாத கர்ப்பிணிகளாக இருந்தனர்.