தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - erode

ஈரோடு மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் பலி
ஈரோட்டில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

By

Published : Jun 24, 2022, 11:53 AM IST

ஈரோடு: தவுட்டுப்பாளையம் வேலாயுதம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. கணவரை பிரிந்த இவர், மகன் சபரி ஸ்ரீ (13) உடன் வசித்து வருகிறார்.சபரிஸ்ரீ 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். அச்சிறுவன் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளான்.

இந்நிலையில் கடையில் உள்ள யுபிஎஸ் ஒயரை பிடித்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளான்.

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சபரிஸ்ரீயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சபரி ஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மகனை மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க சொல்லிவிட்டு, டாக்டர் அப்பா அடித்த 'கிளுகிளுப்பு' டூர்!

ABOUT THE AUTHOR

...view details