ஈரோடு: இன்று ஆங்கிலப் புத்தாண்டையொட்டியும், பள்ளிகளுக்கு தொடர்விடுமுறை என்பதாலும் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கரோனா தொற்று மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொடிவேரி அணை பாதி நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகளின் வரவு சற்று குறைந்த அளவு காணப்பட்டது.
தற்போது தடை ஏதும் இல்லாத நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்ற அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதாலும், தொடர்விடுமுறை காரணமாகவும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலை முதலே கொடிவேரி அணைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.