ஈரோடு:குன்றி மலைப்பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர், மசனன். இவரது மனைவி லில்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் லில்லிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அங்கிருந்தவர்கள் 108 என்ற உதவி எண் மூலம் ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.
கடம்பூரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அரப்புலிசாமி, மருத்துவ உதவியாளர் விஜய் ஆகியோர் கர்ப்பிணி லில்லியை ஏற்றிக்கொண்டு கடம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஆம்புலன்ஸிலேயே பிரசவம்
கடம்பூர் அருகே மலைப்பாதையிலேயே பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் லில்லிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதனைத் தொடர்ந்து குழந்தையுடன் லில்லியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயையும் சேயையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிவித்தனர். மலைப்பாதையில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் விஜய், ஓட்டுநர் அரப்புலிசாமி ஆகியோரைப் பொதுமக்கள் பாராட்டினர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை