தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகள் நிறைவு - 800 கனஅடி நீர் திறப்பு! - Lower Bhavani Canal renovation works completed

ஈரோடு: சத்தியமங்கலம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பு பகுதிகள் பொதுபணித் துறையினரால் சீரமைக்கப்பட்டு விநாடிக்கு 800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Lower Bhavani Canal

By

Published : Nov 14, 2019, 3:55 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணையிலிருந்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வரை 124 மைல் நீளத்தில் வெட்டப்பட்ட கீழ்பவானி பிரதான வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கு நெல் பயிரிட விநாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி சத்தியமங்கலம் அருகே மில்மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலின் கரை உடைந்து அப்பகுதியில் உள்ள நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிரிடப்பட்ட விவசாய விளைநிலங்களில், நீர் புகுந்ததோடு 100க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரால் சேதமடைந்தன.

இதையடுத்து, பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, கரை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித் துறையினர் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது, கரைப்பகுதியில் எம் சாண்ட் மணல் மூட்டைகள் அடுக்கியும், ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தியும் மண்கரை அமைக்கும் பணியை முடித்து கரையைப் பலப்படுத்தினர்.

சீரமைக்கப்பட்ட கீழ்பவானி வாய்க்கால்

அதன்பின், அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 800 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரை உடைப்பு சரி செய்த வாய்க்கால் பகுதியில் நீர் ஓடுவதால் மீண்டும் கசிவு ஏற்படுகிறதா என பொதுப்பணித்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். மேலும் நீர் திறப்பு ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கீழ்பவானி வாய்க்கால் கரை சீரமைப்புப் பணி நிறைவடைந்தவுடன் தண்ணீர் திறப்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details