கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த பெரிய கொடிவேரி ஊராட்சி, சவேரியார் வீதியைச் சேர்ந்த தம்பதியினர் வெள்ளியங்கிரி-சாந்தி. இவர்களது மகள் ஸ்ரீமதி (8). இவர் அருகில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூன்.04) விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு சிறுமி வெளியேறியுள்ளார். தொடர்ந்து, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமி, அருகில் இருந்த மின்கம்பத்தை தொட்டுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம் சிறுமியைத் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டுளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுமி ஸ்ரீமதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள சத்தியமங்கலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடலை உடற்கூராவிற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பங்களாபுதூர் காவல் துறையினர், சிறுமி உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள மின்கம்பத்தில் வயர் அருந்து தொங்கிக் கொண்டிருந்ததும், இரும்பு மின்கம்பம் என்பதால் எளிதில் அதன் வழியாக மின்சாரம் பாய்ந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க:ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க அனுமதி!