ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கே.என்.பாளையம் வனத்துறை சோதனைச் சாவடி வழியாக புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, பங்களாபுதூர் சோதனைச் சாவடி அருகே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வேனை நிறுத்தி சோதனை செய்ததில், பூண்டு மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
கர்நாடகாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல்! - கர்நாடகாவிலிந்து கடத்தி வரப்பட்ட 8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள்
ஈரோடு: கர்நாடகாவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
![கர்நாடகாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்கள் பறிமுதல்! pan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:21:33:1599551493-tn-erd-01-gutka-seized-script-vis-7205221-08092020111139-0809f-1599543699-458.jpg)
இதையடுத்து, பூண்டு மூட்டைகளை இறக்கிவிட்டு வாகனத்தின் உள்ளே சோதனை செய்ததில் 35 மூட்டைகள் மற்றும் 10 அட்டை பெட்டிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், பான் மசாலா உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. உடனடியாக ஓட்டுநரை கைது செய்த காவல் துறையினர் புகையிலை பொருள்களையும், வேனையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், சிவகங்கை தேவகோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. மேலும், இந்த கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், தமிழ்நாட்டில் வேறு எந்த பகுதியில் புகையிலை பொருள்கள் கடத்தப்படுகிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.