ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். இவரது மகன் சரண்(7) தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
டெங்கு காய்ச்சலுக்கு பலியான ஏழு வயது சிறுவன்! - மருத்துவமனை
ஈரோடு : டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
டெங்கு காய்ச்சலுக்கு பலியான சரண்
இவர், கடந்த இரண்டு வாரங்களாக முன்பு கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்பு, கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி சரண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், தாளவாடி மலைப்பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு தாளவாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.