தமிழ்நாடு

tamil nadu

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து 500 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

By

Published : May 27, 2021, 9:43 AM IST

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து விநாடிக்கு 500 கனஅடி உபரி நீர் நீரோடை வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

குண்டேரிப்பள்ளம் அணை
குண்டேரிப்பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வினோபாநகர் அடர்ந்த வனப்பகுதியின் அருகில் குண்டேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது.

இந்த அணையின் முழு கொள்ளவு 42 அடி. குன்றி விளாங்கோம்பை கம்பனூர் மல்லியம்மன்துர்க்கம் போன்ற மலைக்கிராமங்கள் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக உள்ளன. கடந்த வாரத்தில் ஒரே நாளில் பெய்த மழையால் அணையின் நீர் மட்டம் 40 அடியை எட்டியது.

இதனால் அணைக்கு வரும் உபரிநீர், நீரோடை வழியாக அப்படியே வெளியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (மே 26) காலை குண்டேரிப்பள்ளம் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் மீண்டும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து. அணைக்கு வரும் 500 கனஅடி உபரிநீர், அப்படியே வெளியேற்றப்பட்டதால் வெள்ளம் கரைபுரண்டோடியது.

இதனால், வினோபாநகர் கொங்கர்பாளையம் மோதூர் வாணிப்புத்தூர் பள்ளத்தூர் கள்ளியங்காடு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details