தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தகராறு: கொலை செய்யப்பட்ட தொழிலாளிக்கு நீதி கிடைக்க போராட்டம்! - road blockade in sathyamangalam

ஈரோடு: கடம்பூர் மலையில் இரண்டு நாள்களுக்கு முன்னர் தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலையான நபர் குறித்த தகவல் இன்று கிடைத்தது. தகவலறிந்த உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Dec 1, 2020, 10:04 PM IST

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள வைத்தியநாதபுரம் மலைக்கிராமம் அருகே சாலையோர வனப்பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு உடல் கிடந்தது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் சடலம் குறித்து அப்பகுதியினர் கடம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நிர்வாணமாக கிடந்த நபர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். கொலை செய்யப்பட்டவர் குறித்த விவரங்களையும், கொலைக்கான காரணங்களையும் கடம்பூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் கொலையான நபர் அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி மாதன் (50) என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மாதனுக்கு சொந்தமான நிலம் சம்பந்தமாக பிரச்சனை உள்ளதாகவும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற மாதன் திரும்பி வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

நிலத்தகராறு விவகாரத்தில் மாதனை கொன்றவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர், ஊர் மக்கள் உயிரிழந்த மாதனின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details