தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் ஐபிஎல் சூதாட்டம்: 5 பேர் கைது! - ஐபிஎல் கிரிக்கெட் 2020

ஈரோடு: வாடகைக்கு வீடு எடுத்து ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 நபர்களைக் பெருந்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஐபிஎல்
ஐபிஎல்

By

Published : Nov 4, 2020, 12:45 PM IST

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகேயுள்ள வீட்டில் இளைஞர்கள் சிலர் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக பெருந்துறை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் மேற்கொண்ட விசாரணையில், லோகநாதன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து தொலைக்காட்சியில் ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இந்த கிரிக்கெட் சூதாட்டத்தில் வீட்டின் உரிமையாளரும் இளைஞர்களுடன் சேர்ந்த பணம் கட்டி விளையாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 நபர்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், 5 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில், கைதான ஐந்து பேரும் திருப்பூர், ஈரோடு, பெருந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த லோகநாதன், சுரேஷ், அருண்குமார், கார்த்தி மற்றும் ஆனந்தகுமார் என்பது தெரிய வந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த சூதாட்டத்தில் தொடர்புடையவர்கள் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஐபிஎல் சூதாட்டம்: பெங்களூருவில் ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details