தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒற்றை யானையைக் கண்காணிக்க 4 தனிப்படை அமைப்பு - 4 separate team formed to track single elephant

ஈரோடு: சத்தியமங்கலம் பவானிசாகர் அணைப்பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானையைக் கண்காணிக்க, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Elephant
Elephant

By

Published : Nov 19, 2020, 9:48 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்தக் காட்டு யானைகள் அவ்வப்போது பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்திற்குத் தண்ணீர் குடிக்க வருவதோடு, அணையை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி நுழைந்து வாழை உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில், பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தை ஒட்டி அமைந்துள்ள காராச்சிக்கொரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை, பூங்கா அருகே உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான பழத்தோட்ட நுழைவு வாயில் அருகே வந்து அங்குள்ள இரும்பு கேட்டை கடந்து வெளியே தார் சாலைக்கு வந்தது.

இப்படி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வரும் அந்த ஒற்றை காட்டு யானை பூங்கார் காலனிக்குச் செல்வதால், அங்கு வசித்து வரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் ஒற்றை காட்டுயானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், ஒற்றை யானை நடமாட்டம் காரணமாகப் பூங்கார் காலனியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தனர். பவானிசாகர் அணைப் பகுதியில் இரவு நேரங்களில் உலா வரும் ஒற்றை காட்டு யானையைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட 20 பேர் கொண்ட 4 தனிப்படையைச் சேர்ந்த அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனச்சரகங்களைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்கள், இந்தத் தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். பகல் நேரத்தில் வெளியேறும் ஒற்றை யானையைக் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதற்காகத் தனிப்படை தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details