கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இமாம்பாடா பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் மன்சூர் அலி (49). இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளராக இருந்து கொண்டு ரியல் எஸ்டேட், பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் வழக்கம் போல் கடந்த ஞாயிறன்று நடைபயிற்சிக்கு சென்றபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணிந்தபடி வந்த 5 பேர் கொண்ட கும்பல், மன்சூர் அலியை சரமாரியாக வெட்டியது. இச்சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஓசூர் காவல்துறையினர், குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இக்கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.
திமுக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் கொடுமுடி நீதிமன்றத்தில் சரண் சரணடைந்த கஜேந்திரன், சந்தோஷ்குமார், யஷ்வந்த்குமார், கோவிந்தராஜ் ஆகியோரை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சபீனா, 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களிடையே மோதல்: துப்பாக்கியுடன் வலம் வந்த மாணவர்!