சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் மான்கள் வேட்டையாடுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வனத்துறை அலுவலர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜன.29) விளாமுண்டி வனப்பகுதியில் உள்ள மல்லியம்பட்டி சாலையில் ரோந்து சென்றனர்.
அப்போது, அப்பகுதியிலுள்ள முட்புதர் காட்டிலிருந்து நான்கு நபர்கள் சாக்குப்பை, கத்திகளுடன் நடமாடுவதை கண்ட வனத்துறையினர், அவர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நான்கு பேரும், கணக்கரசம் பாளையத்தை சேர்ந்த காளிமுத்து, பழனிசாமி, ரமேஷ், ரவி என்பதும், அவர்கள் விளாமுண்டி வனப்பகுதியில் சுருக்கு கம்பி வைத்து புள்ளி மானை வேட்டையாடி மானின் தோலை உரித்து இறைச்சியை சாக்குப்பையில் போட்டு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்ல முயற்சித்ததும் தெரியவந்தது.