ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் வனப்பகுதியிலிருந்து தந்தம் கடத்துவதாக கணக்கம்பாளையம் பிரிவு வனத்துறையிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த பைக்கை நிறுத்தி வனத்துறையினர் சோதனையிட்டதில் இரு யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பைக்கில் யானை தந்தம் கடத்திய குற்றத்திற்காக தொட்டகோம்பை பழனிச்சாமி(50), அந்தியூர் அங்கப்பன்(54), ஆண்டவன்(47), கோவிந்தராஜன் (41) ஆகியோரை கைதுசெய்தனர்.
அவர்களிடமிருந்து ஐந்து அடி நீளமுள்ள இரண்டு யானை தந்தங்களையும், இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள், தொட்டகோம்பை பகுதியில் கிடந்த இறந்த யானையின் உடலில் இருந்து தந்தங்களை திருடியுள்ளது தெரியவந்தது.