தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அந்தியூர் தொகுதியில் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம் - tn assembly election

ஈரோடு: மூங்கில்பட்டி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும்போது பட்டனை மூன்று முறை அழுத்தியதில் குழப்பம் ஏற்பட்டது.

அந்தியூர் தொகுதி
அந்தியூர் தொகுதி

By

Published : Apr 6, 2021, 7:37 PM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மூங்கில்பட்டி அரசு ஊராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (ஏப்ரல் 6) காலை 11.30 மணியளவில் 162 எண் கொண்ட அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர் ஒருவர் பட்டனை அழுத்தியுள்ளார். அப்போது அதில் பீப் சத்தம் வராததால், அதே வாக்காளர் தொடர்ந்து மூன்று முறை பட்டனை அழுத்தியதால் குழப்பம் ஏற்பட்டது.

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அந்தியூர் திமுக வேட்பாளர் ஏ.ஜி. வெங்கடாசலமும், அதிமுக தொண்டர்களும் வாக்குச்சாவடியில் குவிந்தனர். மேலும் மூங்கில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 4 மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

அந்தியூர் தொகுதியில் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

தொடர்ந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, புதிய மின்னணு வாக்கு இயந்திரம் மாற்றப்பட்டு மதியம் 2 மணிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மேலும் அங்கு மக்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் வாக்களித்ததால் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'இளம் தலைமுறையினர் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details