ஈரோடு: காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிப்பாளையத்தில் உலகப் புகழ்பெற்ற பைரவர் கோயில் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன் நுழைவாயிலில் உலகின் மிகவும் பிரமாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கோயில் கட்டுமானப் பணிகள் தற்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இங்கு உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி உயரத்தில் காலபைரவர் சிலை மிக பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.